10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மாவதி சிறிசெல்வராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உம் விம்பம் காணவில்லை!
கண்களில் வழிந்திடும் கண்ணீரை
துடைத்திட யாருண்டு அம்மா!
புயலுக்கு மத்தியில்
காற்று வீசுவது போல்
பத்தாண்டுகள் கடந்து விட்டன
பலமான காற்றைப் போல
உன் மரணமும் எங்கள்
குடும்பத்தை துண்டு
துண்டாக உடைத்தது
நினைவுகள் நித்தம் வந்து
நிம்மதியை தொலைக்கின்றது
வருமா மீண்டும் வசந்தம் என்ற
தொடரான கேள்வியோடு
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம்
உன்னழகு வதனம் காணாமல்
எம்மனம் நிலவிழந்த வானமென
இருண்டு கிடக்கின்றது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிள்ளைகள்