1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பத்மாதேவி அருளானந்தசிவம்
வயது 66
அமரர் பத்மாதேவி அருளானந்தசிவம்
1957 -
2023
இணுவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 30-08-2024
யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் Catford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மாதேவி அருளானந்தசிவம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அணையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டு இருக்குறீர்கள் அம்மா.
கணப்பொழுதில் நடந்தது என்ன
உன் இறுதி மூச்சு காற்றோடு கலந்தது என்ன
நம்ப முடியவில்லை நடந்தது என்னவென்று
அம்மா அம்மா யாரைக் கூப்பிடுவோம்
எழுந்து எமக்கு ஒரு முத்தம் தாராயோ!
ஆண்டுகள் ஒன்று உருண்டு ஓடினாலும்
அலைகடல் அலை அலையாக என்றும்
உங்கள் அன்பு அலை நினைவுகளுடன்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I'm so sorry for your loss. Sending you all my love and support.”rest in peace. We are sharing in your sorrow