
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் சசிதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-02-2025
காற்றோடு கலந்து கனவாகிப்போய்
ஆண்டு ஒன்று
வந்தும் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால் இன்றும் நான்
ஒவ்வொரு
கணமும் துடிக்கின்றேன் ..!!
கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில்
நடந்தவைகள் நிஜம் தானா
என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
நீ போன இடமெல்லாம் தேடித்திரியும் உனது மனைவி...
பாசமும் பரிவும் தந்த
எங்கள்
குடும்பத்தின் குல தெய்வமே
நீங்கள்
எங்கே சென்றீர்கள் என்னை விட்டு....
புயலுக்கு மத்தியில்
காற்று வீசுவது போல்
ஆண்டு ஒன்று கடந்து விட்டன....
பலமான காற்றைப் போல உங்கள் மரணமும்
என்னைத் துண்டு
துண்டாக உடைத்தது
ஆனால் என் உள்ளத்தில் இருக்கும்
உங்கள் இருப்பை முன்னோக்கி
செல்வதற்கு
பலத்தையும் தைரியத்தையும்
எனக்கு அளித்தது அன்பானவரே....
எத்தனை நாட்கள் மாதங்கள் அல்லது
வருடங்கள் கடந்து இருந்தாலும்
நீங்கள்
இல்லாமல் என் வாழ்க்கை
எப்போதும்
முழுமையானதாக இருக்காது ..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!