Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JUL 1969
இறப்பு 03 MAR 2025
அமரர் பத்மகிரி முத்தையா
Production supervisor at Lansdowne Metal
வயது 55
அமரர் பத்மகிரி முத்தையா 1969 - 2025 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மகிரி முத்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 21-02-2026

கண்ணில் அழுகை ஓயவில்லை 
எம் கனவு வாழ்க்கை புரியவில்லை 
விழிகள் உங்களை தேடுகையில் 
விழிநீர் ஆறாய் ஓடுகிறதே!

பறி கொடுத்து விட்டாலும் உங்கள் 
பாசத்தைப் பறித்துவிட எத்தனை 
ஜென்மம் வேண்டும் அவனுக்கு!

நீங்கள் எனக்கு வழங்கிய பாச 
உறவு என்றும் பிரியாது அப்பா!!! 
துணை எமக்கு யாரென்று 
துவண்டிடும் வேளையில் நீங்கள் 
என்றென்றும் எங்களை நல்வழியில்
 நடத்துவீர்கள் என்கின்ற
 துணிவிலேயே வாழ்கின்றோம்.

ஆண்டு ஒன்று சென்றதென்ன 
அணையவில்லை எங்கள் துயரம் 
சுவாசிக்க சுவாசம் இல்லை 
நேசிக்க யாரும் இல்லை 
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன் 
நிஜங்களைத் தேடுகின்றோம் அப்பா...

உங்கள் நினைவுகளில் எம் கண்கள் 
உடைந்து கண்ணீர் இன்றும் பெருகுதையா!
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் 
உம் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது...

நீங்கள் வாழ்ந்த காலங்கள் 
நெஞ்சில் என்றென்றும்
பசுமையாய் நிலைத்திருக்கும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos