
யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்திமாமலர் அன்ரனி அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தோமா பிரான்சிஸ் அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நேசராசா அருள்ராசி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரனி(நேசரத்தினம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷோபா, ஷோபி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,
சுவாதி, சர்மி, ஸ்ரெபன், செறின், காலஞ்சென்ற செலின், அன்சலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஞானராசா, அரியமலர், ரெத்தினம், பூபால் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றோஸ்மலர், லீலா, தேவி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
அருள்ராஜா, சந்தர், செபஸ்தியான்பிள்ளை, துரைராஜா, சின்ராசா, புஸ்பராணி, காலஞ்சென்ற இந்துராணி, ஜீவராணி, ருக்குமணி, அரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-04-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Eglise: 35 Avenue de la République
93150 Le Blanc-Mesnil
France எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி ஆராதனையின் பின்னர் மு.ப 10:30 மணியளவில் 180 Avenue Descartes, 93150 Le Blanc-Mesnil எனும் முகவரியில் அமைந்துள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.