
யாழ். நெடுந்தீவு கிழக்கு 13ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பசுபதி வள்ளியம்மை அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி குட்டிபிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற செல்லம், அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கதிர்காமர் சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பசுபதி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தயாளநிதிதேவி, மனோகரராசா, தனபாலன் மற்றும் கருணாநிதிதேவி, ரவிச்சந்திரன், சிவகுமார், விஜிதா, புனிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜான்சன், கௌரிதேவி, கலா, லிகிர்தா, வன்னியசிங்கம், அசோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான இரத்தினம், சதாசிவம், சன்முகராசா மற்றும் கனகம்மா, அமிர்தவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, வள்ளியம்மை, தெய்வானை, நாகமுத்து, தவமணி மற்றும் அன்னப்பிள்ளை, கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தீபா, ஜெகன், றொவீனா, றொசாந், டானியேல், பிரதீசன், புவிசன், றொபிசன், மிதுசன், சதோசன், நிரோசன், சதோசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சங்கவி, தன்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பாண்டியன் குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.