யாழ். நெடுந்தீவு கிழக்கு நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி சந்திரசேகரம் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நெடுந்தீவைச் சேர்ந்த பசுபதி அன்னா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நுணாவில் மேற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த முருகேசு பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்கினேஸ்வரி(ஓய்வுநிலை ஆசிரியை- சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
இராமச்சந்திரன், லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கபிலன்(பிரித்தானியா), மிதிலன்(அவுஸ்திரேலியா), சகிலா(ஆசிரியை- யா/சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை), சஞ்சுகன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வித்தியா(பிரித்தானியா), அலிசன்(அவுஸ்திரேலியா), வலன்ரைன் தினேஸ் (தொழில்துட்பவியல் கல்லூரி, கொக்குவில்), அனுசியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிஸ்ரி கவினன், காவியா, கிருத்திக்(பிரித்தானியா), கிரிசன்(பிரித்தானியா), சார்ல்ட் தமிழினி(அவுஸ்திரேலியா), கேசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கணேஸ்வரி, தில்லைநாயகி(கனடா), காலஞ்சென்ற சிவபாலன்(கனடா), சிவநாயகி, அருள்நாயகி, கருணாகரன்(பிரித்தானியா), காளிதாசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று, பின்னர் சாவகச்சேரி தென்னிந்திய திருச்சபையின் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
வீட்டு முகவரி:
யாழ் வீதி 1ம் ஒழுங்கை,
(நுணாவில் பொதுநூலகம் முன்பாக)
நுணாவில் மேற்கு,
சாவகச்சேரி.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776728386
- Mobile : +94778448747
- Mobile : +447538760199
- Mobile : +61435193146
- Mobile : +447983335291