1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பார்வதிதேவி சதாசிவம்
1942 -
2020
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடமராட்சி புலோலி மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பார்வதிதேவி சதாசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அம்மா
எங்கள் தெய்வமே
கண்ணின் கருமணியாய் காத்த எம்மை
கண்ணீர் சிந்த விட்டுச் சென்று
ஆண்டு ஒன்று ஆனதோ..?
ஈரைந்து மாதங்கள் எமை
சுமந்து மீட்டெடுத்தாய் பரிவோடு
பாராட்டி சீராட்டி வளர்த்தெடுத்த
எம் தாயே.! உங்களை இனி
எங்கே காண்போம் அம்மா..!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்