யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, யாழ். கொக்குவில் சாம்பியன் லேன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் பறுவதம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 சென்றாலும் அகலவில்லை
எங்கள் துயரம்
எம் விழிகள் முட்டி நிற்குது கண்ணீரால்
நீங்கள் உங்கள் விழி மூடிய நாள் முதல்
எங்களிடம் இருந்து பிரிந்து விட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்
ஆகி விட்டீர்கள் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய புங்குடுதீவு
அரியநாயகம் புலம் பிள்ளையாரையும்,
கொக்குவில் மாத்தனை முருகனையும் வேண்டி நிற்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.