யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பறுனாந்து அந்தோனிப்பிள்ளை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
இழப்புக்கள் தினம் தாங்கி விடுதலை தேடும்
மண்ணில் பிள்ளைகள் எம் பிரிவை எண்ணி
தினமும் ரணத்துடன் வாழ்ந்த நெஞ்சம்
நம் நல்வாழ்வினை எண்ணி பல
எண்ணங்கள் கொண்ட உள்ளம்
நாம் கண்காணா உலகிற்கு
விரைந்துதான் சென்றதேனோ?
உங்கள் பிரிவால் நாம் ஊமைகளானோம்
உள்ளத்தால் அழுகின்றோம்
வார்த்தைகளுக்குள் அடங்காத சோகம்
உங்கள் பிரிவு தந்த துயரம்
எம் வாழ்விற்குள் அழியாத நினைவு முகம்
நல் தந்தையே உங்கள் அன்பு முகம்
எங்களுக்கு நீங்கள் குறையேதும் வைத்ததில்லை
பெயர் சொல்லிக் கூட எங்களை அழைத்ததில்லை
பப்பா நீங்கள் கோபப்பட்டு நாங்கள் பார்த்ததில்லை
எப்போதும் அமைதியாய் புன் சிரிப்போடும்
குறுநகையோடும் வாழ்ந்தீர்கள்...
நாட்டின் சூழ்நிலையால் நாம்
உங்களை விட்டு பிரிந்திருந்தோம்
உங்கள் இறுதி நிமிடத்திலும்
இறுதி யாத்திரையிலும் கூட உங்கள்
முகம் பார்க்க முடியவில்லை உங்களை தோழில் சுமக்கவும் முடியவில்லை பப்பா
அது எங்கள் வாழ்நாள் கவலை..
உங்கள் அன்பை.. பண்பை... கனிவை.. பாசத்தை..
நேசத்தை உங்கள் பிள்ளைகளாகிய நாங்கள் மம்மியுடன்
என்றும் நினைவில் கொண்டு உங்களை எங்கள்
நெஞ்சில் சுமந்து வாழ்கிறோம்...
அடைக்கலமானீர் இறைவனிடம்
அவனடி தொழுகின்றோம் பப்பா
நாம் நாளும் உங்களுக்காய்....