கல்விப்பணிப்பாளரும், தமிழ்இலக்கிய ஆளுமையும், அருமை ஆசானுமாகிய மகேஸ் மாஸ்ரர் அவர்களது அருமை மகன் பாபுவின் இழப்பு மிகுந்த துயர் தருகின்றது. கனடாவில் மாஸ்ரரோடு அந்த அரிய கலைஞரை சந்தித்த பொழுதுகளை எண்ணிப் பார்க்கின்றேன். முதிர்ந்த மரமிலையே, மூச்சடங்கும் வயதில்லையே உனக்கு! ஏனிந்த அவசரம் ! அவரை இழந்து தவிக்கின்ற அவரது துணைவியார்,பிள்ளைகள்,பெற்றோர்கள், உறவுகள், நண்பர்களுக்கு ஆறுதல் தரவல்ல வார்த்தையை நான் எங்கு தேடுவேன் ?? உறவுகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல். கண்ணிற்குள் நிற்கிற அந்த உயிர்க் கலைஞனுக்கு என் ஆத்மார்த்த அஞ்சலி! “வாழும் வயது மகன் வளர்ந்து வந்த பெருங்கலைஞன் நாளும் தமிழ் காத்த நல்லாசிரியன் அவன் பாழும் உலகிருட்டைப் பகலாக்க துடித்த மகன் சின்னதோர் வயதிற்குள்ளே ஜெகத்தையே புரட்டிப் போட்ட கன்னலாய் ஓவியங்கள், கைவினைச் சிற்பமென்று என்னவாய் வரைந்தான் ஐயோ இனி நமக்கிலையே பாபு”