2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பார்த்தீபன் ஜெசில்டா
வயது 39
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பார்த்தீபன் ஜெசில்டா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா, அப்பாக்கும் அண்ணன்,
தம்பிக்கும், அக்காகளுக்கும்,
ஆசைப் பிள்ளையாய் அன்புத் தங்கையாய்
பாசமிகு அக்காவாய் வாழ்ந்திருந்தாய்
அந்தக் காலனுக்கு இது பொறுக்கலையே
எமது அன்புத் தங்கையே
உனது சிரித்த முகமும்
அன்பு விரித்த அகமும்
இருப்பதை ஏற்கும் இயல்பும்
உடைய நீ எங்கு சென்றாய்
உன் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உன் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....
உன் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு அண்ணன்.
தகவல்:
சகோதரர் - நெல்சன்