அத்தை மகளே, சிறு வயதில் நாம் சேர்த்து விளையாடிய நாட்கள், வாழ்ந்த நாட்கள் எமது வாழ்வின் பொற்காலங்களே. நானும், லீலா மச்சாளும், நீங்களும் கைகள் கோர்த்து நடந்த காங்கேசன் துறை பாதைகள், உங்கள் தோட்டத்தில் பிடுங்கி சாப்பிட்ட மாங்காய், புளியங்காய், விளாங்கா, மாங்காய்.....மகிழ்ந்த நாடகள் மீண்டும் வருமா?? காலம் பல கடந்தாலும் அழியாத சுவடுகள் பரிமளம் மச்சாள். அத்தை மடி மெத்தை என்பார்கள் அதற்கு ஒப்ப பள்ளி விடுமுறை என்றால் அத்தை வீடு தான். எனது அன்பான அத்தை, மச்சாள்மாருடன் வாழ்த காலங்கள் அழியாத சுவடுகள் தான். என்றும் என் நினைவில் உயிரோடு வாழ்கின்றன. நிலையற்ற இந்த வாழ்க்கையில் வருவதும் போவதும் இறைவனின் நியதி என்றாலும் உங்கள் இழப்பு மாறாத காயம் தான் மச்சாள். என் நினைவுகளில் நீங்கள் என்றும் வாழ்வீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். ஓம் சாந்தி 🪷
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.