யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பராசக்தி சிவப்பிரகாசம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:01/07/2023.
அம்மா விழிகள் சொரிகிறது
சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா
தாங்கமுடியாத சோகத்தை எமக்களித்து
எமைவிட்டு எங்கு சென்றீர்கள்!
அம்மா எங்கள் இதயங்களின் அலைகளில்
உங்கள் ஒளி உமிழ் குமிழ்களாக மிதக்கின்றன
இந்த இருப்பை எங்களிடமிருந்து
யாரும் பிரிக்க முடியாது
மறைக்கவும் முடியாது!
இருப்பினும் இன்றுவரை கணங்கள் தோறும்
உங்களைப் பற்றிய எண்ணங்கள்
இதயங்களில் வலியையும்
ஞாபகங்கள் கண்ணீரையும்
தந்துகொண்டேயிருக்கின்றன!
எம் இதயத்தில் குடியிருக்கும் எம் தாயே
நீ எம்மை விட்டு பிரிந்து
ஐந்தாண்டுகள் சென்றாலும்
என்றும் எம் நினைவில் திகழ்கின்றாய்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!