

யாழ். புலோலி மேற்கு மணல் ஒழுங்கை திருநாவலூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி விஜயரத்தினம் அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராசா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்பு பெறாமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா விஜயரத்தினம்(ஓய்வுநிலை வங்கி முகாமையாளர்- இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருச்செல்வம், வசந்தாதேவி, விக்னேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயதேவி, சோமாஸ்கந்தன், சிவகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரேஷ்(பாலசாரங்கா ஜுவல்லரி- கனடா), சுஜாதா, விஜிதா(கனடா), சபேஷ்(ஸ்ரீ அம்பாள் எலக்றிக்கல்ஸ்), சதீஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலகுமாரி(கனடா), கதிரமலை(ஆசிரியர், யா/வேலாயுதம் மகா வித்தியாலயம்), லஜீபன்(கனடா), சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஷ்ணுஜி, கிருஷ்ணி, அபிஷ்ணவி, ஜசோபா, கிருஷியா, கிருத்திகா, லஸ்மினி, கிருஷனா, அனிஷ்கா, அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details