பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்
எங்கள் வாழ்வின் வழிகாட்டியாய்த் திகழ்ந்து
எம்மையெல்லாம் ஆறாத் துயரில் ஆழ்த்தி
மீளாத் துயில் கொண்ட எங்கள் குடும்ப ஒளிவிளக்கு
அமர்த்துவமாது திருமதி. பராசக்தி கார்த்திகேசு
அவர்கள் சிவபதம் அடைந்த செய்தியறிந்து எமது
இல்லங்களுக்கு நேரில் வந்து அனுதாபங்கள்
தெரிவித்தவர்களுக்கும் அனுதாபச் செய்திகள்
அனுப்பியவர்களுக்கும் தொலைபேசி மூலம்
உலகமெங்கும் இருந்து எமக்கு ஆறுதல் கூறி எமது
துக்கத்தில் பங்குகொண்ட அனைத்து அன்பு
உள்ளங்களுக்கும், பார்வையாளர் மண்டபத்திற்கு
வருகைதந்து ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை
புரிந்தவர்களுக்கும், மலர் வளையம்
சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகளை
வெளியிட்டவர்களுக்கும், அஞ்சலி உரை
நிகழ்த்தியவர்களுக்கும், இறுதிக்கிரியைகள்,
அந்தியேட்டி, சபீண்டீகரணம் முதலியவற்றில் கலந்து
சிறப்பித்தவர்களுக்கும், பரமன் புகழ் பாடும்
திருமுறைகளை ஓதியவர்களுக்கும் அனைத்து
கிரியைகளையும் நடாத்தி வைத்த அந்தணப்
பெரியோர்களுக்கும், இந்த நினைவு மலரை அழகுற
அச்சமைத்துத் தந்த ஜேஜே அச்சகத்தாருக்கும்,
மற்றும் தேவையான போதெல்லாம் உதவி
ஒத்தாசைகள் புரிந்த அனைவர்க்கும் மற்றும் உற்றார்,
உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது
மனப்பூர்வமான நன்றிகளையும் வணக்கங்களையும்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
”காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
Please accept our Deepest sympathies