

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி இராமலிங்கம் அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பிராசா(வைத்தியர் ), சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற நாகநாதர் இராமலிங்கம்(வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானசம்பந்தன்(ஜேர்மனி), ஞானசேகரன்(யாழ்ப்பாணம்), நந்தகுமாரன்(ஜேர்மனி), மன்மதராசன்(ஆசிரியர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(நாவேந்தன்- அதிபர்- எழுத்தாளர், முன்னாள் பிரதி மேயர்- யாழ் மாநகரசபை), துரைசிங்கம்(ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்), காலஞ்சென்ற ஞானசக்தி(பெரும்பாக உத்தியோகத்தர்- கமநலசேவைத் திணைக்களம்), சிவானந்தன்(மருத்துவர்), இளங்கோவன்(மருத்துவர்- பிரான்ஸ்), சரோஜினிதேவி(ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி), தமிழ்மாறன்(பேராசிரியர்- சட்டபீடம், கொழும்பு பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சீதேவிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை(கனடா), ஆறுமுகம்(பாரிஸ்), செல்லத்துரை(ஓய்வு பெற்ற ஆசிரியர்- கொழும்பு, காலஞ்சென்ற தர்மலிங்கம்(கல்வி அதிகாரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புனிதாம்பாள், மங்களேஸ்வரி, லலிதாதேவி, வாசுகி(அதிபர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துவாரகன், அநேகன், சௌமியா, செல்வகாந்(முகாமைத்துவ உதவியாளர், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு- வடமாகாணம்), விசாலினி(ஆசிரியை), கௌசல்யா- பரமேஸ்வரன்(கனடா), விமலகாந்(வர்த்தகர்)- சிந்துஜா(ஆசிரியை), பவித்திரா- பரத்(அவுஸ்திரேலியா), துளசிகா, தீர்த்தகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
துவாரகி, கவின், பவிஷா, கம்சனா, யதுசா, அதிசன், சஞ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2019 திங்கட்கிழமை அன்று யாழ் கந்தர்மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் யாழ் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.