



விழி நீரில் பொங்கிவரும் அன்பின் உணர்வலைகள்...! அமரர் திருமதி பரராஜசிங்கம் சின்னப்பிள்ளை பூங்கையூர் செல்லப்பிள்ளை பொங்கும் மனம் அன்புப்பிள்ளை வேல் வெளியில் பிறந்தபிள்ளை வேலன் மடி சென்றாயோ! சொக்கரது சின்னப்பிள்ளை சொக்கு மனம் அன்புப்பிள்ளை வெல் அறிவு கெண்ட பிள்ளை வீரமுடன் சென்றானோ! புன்னகையின் நாயகியே அன்புக்கு நீ சேவகியே நேசம் கொண்ட உறவுகளோ ஏங்கும் உந்தன் பாச மடி! காலத்தை நீ வென்ற பிள்ளை காரணமோ நீ நல்ல பிள்ளை நோயில் உடல் சரிந்தாலும் மன திடனாய் வாழ்ந்த பிள்ளை ! உன் பாசத்துக்கு பஞ்சமில்லை உன் அன்புக்கு எல்லையில்ல அறத்தினில் வாழ்ந்த பிள்ளை இறை மாடியில் சென்றயோ! பூமி வாழ்க்கை வாடகையோ வேல் கொடுத்த வரமிங்கே அறிவென மலர்ந்த சிவம் காரிருளில் சென்றதிங்கே! நீ ஈன்ற பிள்ளைகளோ தாய் வணங்கும் தங்கங்களோ வீரம் கொண்ட மூத்தவனே வேல் மகனின் பாதையிலே! தாயை விட தெய்வமில்லை தந்தை சொல்லே மந்திரமே இயந்திரத்து வாழ்க்கையிலும் தாங்கும் மனம் தாயுள்ளமே! வாழ்த்துவாயோ வாழ்த்துவாயோ மெய்யுணர்வின் அறிவு மனம் உறவுகளோ பெற்றுவிட விழிநீரில் எரியும் தீபமாய் நீ வான் நோக்கி காட்டுகிறோம் என்றும் எம்மை வாழ்த்துவாயா வணங்கி நிற்கிறோம். புங்கையூர் மக்கள் By: உதயன் சோமசுந்தரம் Sent from my iPhone