முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் மோகீசன் அவர்களின் நன்றி நவிலல்.
நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்
காற்றொன்று வீசியதாய்
நினைவிருக்கிறது
நீ கலைந்துபோன
கணம் மட்டும் நினைவில் இல்லையய்யா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
நினைக்க மனம் மறுக்குதய்யா
நீ இருந்த இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள் எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்
நிமிடங்களில் நதிகளும் தோற்கின்றன
மீட்டும் விரல்களை தொலைத்த
வீணைகளாய் நாமிங்கு..
கார் இருளில் கலைந்தவனே..! நீ எங்கே?
காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
இன்றும் நீ - எம்மோடு
வாழ்ந்து கொண்டே இருக்கின்றாய்
என்றும் நீங்காத சோகம்
எம் நெஞ்சங்களோடு
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் உலகைவிட்டுப்பிரிந்த தம்பி மோகீசன் அவர்களுடைய 31ம் நாள் நிகழ்வுகள் வருகின்ற 23/11/2022 புதன்கிழமை 4ம் வட்டாரம் கோம்பாவில் அமைந்த அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது. அத்துடன் மதிய போசன நிகழ்விலும் உற்றார் உறவினர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்