யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கோபால் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பரநிருபசிங்கம் வரதலட்சுமி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 07.05.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 06.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வானது 09.05.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் நடைபெறும். கொரோனா காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் வண்ணார்பண்ணை இல்லத்தில் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகிறோம் .
எமது அப்பம்மாவின் துயரச்செய்தியை அறிந்து ஆழாத்துயரத்தில் மூழ்கியுள்ளோம்! ஓம் ஷாந்தி! ஓம் ஷாந்தி! ஓம் ஷாந்தி!