3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பரமலிங்கம் கைலாயபிள்ளை
1923 -
2016
இணுவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் கைலாயபிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா-மூன்று
வருடம் விரைந்தே போச்சுதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம் -ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும்
வேளையில் நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்நெஞ்சை
விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயத்துடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா
என்றும்
உங்கள் நினைவுடன் வாழும் அன்பு
மனைவி, பாசமிகு பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்..
தகவல்:
சிறிகாந்தன்(சிறி)- மகன்