யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இராமசாமி அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா மாணிக்கம்(புலோலி கிழக்கு) இராசம்மா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு(அளவெட்டி) சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற S.S இராமசாமி(இராமசாமி மாஸ்ரர்- புலோலி வேலாயுதம் மகாவித்தியாலய ஆசிரியர்)அவர்களின் அன்புத் துணைவியும்,
தண்மதி(நியூசிலாந்து), நிலாநேசன்(கனடா), சுதமதி(கனடா), ஐக்கியசீலன்(கனடா), செல்வமதி(ஐக்கிய அமெரிக்கா), தயாளன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வமகேஸ்வரன்(நியூசிலாந்து), அம்பிகா(கனடா), ஹரிந்திரன்(கனடா), வாசுகி(கனடா), ரவீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), மஞ்சுளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நளீந்திரா, லவேந்திரா, குஷேந்திரா, சியாமளன், ஜனகன், அருண், பவித்திரன், அபிஷேக், ஆலவன், அநேகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்ஷயா, வினாய், நிஷா, கலேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May our condolences bring you comfort and may our prayers ease the pain of your amma loss.