அமரர் பொன்னம்பலம் கந்தையா:
பிறப்பு : 16-09-1931
இறப்பு : 03-08-2016
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி றோட்டை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் கந்தையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 10 சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
------------------------------------------------------------------
அமரர் பரமேஸ்வரி பொன்னம்பலம்:
பிறப்பு : 26-10-1938
இறப்பு : 03-08-2016
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி றோட்டை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி பொன்னம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாய் எமை சுமந்து
அரணமைத்து பாதுகாத்தாய்
அகம் நிறைந்து நாம் வாழ
மன மகிழ்ந்து பூரித்தாய்!
நாங்கள் கதைக்கும் போது
கேட்டு சிரிப்பாயம்மா
இப்போது நாங்கள் கதைக்கின்றோம்
நீங்கள் இல்லையம்மா
ஆறுதல் இன்றும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் அம்மா!
வாழ்ந்திடும் காலமெல்லாம்
இனி உங்கள் துயரந்தான்
வழிந்தோடும் கண்ணீரை
உங்கள் காலடியில் சேர்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!