
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 23-09-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அழகரத்தினம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி சரஸ்வதி தம்பதிகளின் மருமகளும்,
கலாபூஷண நாடகச்சக்கரவர்த்தி பரராஜசிங்கம்(பப்பா- முன்னாள் விற்பனைப்பிரதிநிதி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் தனலட்சுமி(பிரதி அதிபர்- பெயார் லேன் தமிழ் மகாவித்தியாலயம், சாமிமலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரதீஸ்(ஆசிரியர்- மெதஸ்டித பெண்கள் உயர்தர பாடசாலை), றமேஸ்(முகாமைத்துவ உதவியாளர்- காணிப்பதிவகம், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), றாதிகா(ஆசிரியை- புற்றளை மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மீரா(ஆசிரியை- அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலை), நிருஜா(கனிஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர், இலங்கைவங்கி, சுன்னாகம்), கிருபாகரன்(ஆசிரியர்- மன்/பற்றான் கண்டன் றோ.க.த.க. பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இலக்கியா, அட்ஷஜா, அபிநயா, அதிசயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.