1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி நவரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிலே பூத்த எங்கள்
ஆருயிரே அம்மாவே!
ஆசையுடன் ஓடி வந்து
அன்புருக அணைத்தீரே!
இன்பமாக வாழ்ந்த உன்னை
காலன் கொண்டு சென்றனனே!
ஈவிரக்கம் இல்லாத எமன்
வந்து கவர்ந்தனனே!
உமைக் காணாப் பிள்ளைகள்
நாம் உருகியிங்கே ஏங்குகின்றோம்!
நம் கண்ணீர் துடைத்திட
உன் கரங்களுக்கு வேறு இணையுண்டோ!
ஊர் போற்றி வாழ்ந்திட்ட
பொற்பதமே எங்கள் அம்மா!
உன்னோடு வாழ்ந்திட்ட
நாட்கள்தான் சொர்க்கமாகும்!
நீ எங்கிருந்தாலும் எமை வாழ்த்தி
வரம் கொடுக்க வந்திடம்மா!
எம் விழி நீர் துடைக்க
உம் கரத்தை தேடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் அன்பு நண்பன் முகுந்தனின் தாயார் இறைபதம் அடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த துயர் அடைவதுடன் அன்னாரின் ஆத்மா அமைதியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்....