அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm நகரை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தராசா அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்குள் உயிரான ஒளியின் திருமுகமே வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு வீசும் காற்றோடு கலந்திட்ட மாயமென்ன!
உலகையே எங்களுக்கு தந்தாலும் உங்களை போல் இணை ஆகுமா- அம்மா உங்கள் கருவிலே சுமந்து எங்களுக்கு உயிர்கொடுத்தாய்..! இன்று நீங்கள் இன்றி எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா..!
ஆண்டுகள் பதினொன்று கடந்தாலும் அமைதியின்றி வாழ்கிறேன் உங்கள் நினைவுடனே அம்மா! எல்லோரையும் தவிக்கவிட்டு ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய் அன்புடனும் பாசத்துடனும் எம்முடன் கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில் இன்றுவரை வாடுகின்றோம்..! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!