யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி யோகலிங்கம் அவர்கள் 06-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிளை யோகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
லிங்கேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற தமிழரசி, தேவகுமார்(பிரித்தானியா), பிரசாந்தன்(பிரித்தானியா), மனுசுதன்(இலங்கை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சுகந்தினி(இலங்கை), சிந்துஷா(பிரித்தானியா), பவானி(பிரித்தானியா), வேணுகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
முருகேசு, செல்லத்துரை, மகேந்திரம், தங்கராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யோகேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற யோகமூர்த்தி(ஜேர்மனி), யோகாம்பிகை(இலங்கை), காலஞ்சென்ற யோகரஞ்சி(இலங்கை), யோகானந்தன்(இலங்கை), யோகமனோகரி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சகானா, நிஷானா, சஞ்சித்(இலங்கை), அர்வின், அகர்வின், அக்சியா, அங்குசன்(பிரித்தானியா), அபிஷரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கொடிகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.