10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 JUL 1929
இறப்பு 29 NOV 2011
அமரர் பரமேஸ்வரி செல்வத்துரை (பரமேசக்கா)
உடுத்துறை மகாவித்தியாலயம், மதியா மடு விவேகானந்தா வித்தியாலயம், கனகராயன்குளம் மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் ஆசிரியையாகக் கடமையாற்றி இளைப்பாறியவர்
வயது 82
அமரர் பரமேஸ்வரி செல்வத்துரை 1929 - 2011 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், உடுத்துறை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி செல்வத்துரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியவள்!
உதிரமெல்லாம் பாசத்தை ஏந்தியவள் எம் தாய்!
தொட்டிலில் இட்ட அன்னையை
பத்தாண்டு தாண்டியும் அழுகின்றோம்!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

ஆண்டுகள் பத்து அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

இறைவன் காலடியில் என்றென்றும்
வாழ்ந்திடம்மா உன் நேசம் மறவாது
நிழலாக நாமிருப்போம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices