
யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குணரட்னராஜா அவர்கள் 04-06-2019 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அன்னம்மா, கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவமணி தம்பிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரட்னராஜா(கல்வி திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுணா, மேகலா, குகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயகுமார், விபுலன், தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜலட்சுமி, சரஸ்வதி, காசிப்பிள்ளை, யோகேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் கணேசநாதன், யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, மகாதேவன், குகதாசன், திருநாவுக்கரசர், தவமணி, ஆறுமுகம், நாகவேல் மற்றும் மனோரஞ்சிதம், பவளமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கார்த்திகன், சுருதி, கோகுலன், லதுஷான், தாகித்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.