

யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது மாத்தளையை வதிவிடமாகவும் கொண்ட தண்டாயுதபாணி குருக்கள் பரமேஸ்வரி அம்மா அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று மாத்தளையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் தேவஸ்தானத்தின் முன்னாள் பிரதமகுரு காலஞ்சென்ற பாலசுப்பிரமணிய ஐயர், சீதாலட்சுமி அம்மா தம்பதிகளின் மூத்த மகளும், கீரிமலை நகுலேஸ்வரம் தேவஸ்தான பரம்பரையைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவஸ்ரீநடராஜ குருக்கள், மீனாட்சி அம்பாள் தம்பதிகளின் மருமகளும்,
காரைநகர் தோப்புக்காடு ஸ்ரீ சுப்பிரமணிய தேவஸ்தானம், ஊர்காவற்துறை பருத்தியடைப்பு கதிரேசன் தேவஸ்தானத்தின் முன்னாள் பிரதமகுரு சிவ தர்ம பூசணம் சிவஸ்ரீ ந. தண்டாயுதபாணி குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,
சரஹண பவானந்த குருக்கள்(ஸ்ரீவிஷ்ணுதுர்க்கை அம்பாள் தேவஸ்தானம்- சுவிஸ்), லலிதாம்பிகை(சுவிஸ்), ஜெயந்தி(பிரான்ஸ்), இந்துமதி(இந்தியா), சுகந்தி(மாத்தளை - இலங்கை), சடானன சர்மா(சுவிஸ்- ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெகதாம்பிகை(சுவிஸ்), சுந்தரராஜ சர்மா(மனோன்மணி அம்பாள் தேவஸ்தானம்- சுவிஸ்), கணேஷ் ஐயர்(ஜெயந்தி ஐயா- பிரான்ஸ்), காலஞ்சென்ற கைலாசநாத குருக்கள்(மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தானம்), சிவானந்த குருக்கள்(மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தானம்), பகீரத சர்மா(இந்தியா), கல்யாணி(சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிரை காரைநகர் தோப்புக்காடு விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்று பின்னர் நீலங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details