1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 DEC 1936
இறப்பு 10 AUG 2020
அமரர் பரமேஸ்வரன் கனகாம்பிகை
வயது 83
அமரர் பரமேஸ்வரன் கனகாம்பிகை 1936 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரன் கனகாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் உயிருக்குள் உயிரான தெய்வமே!
எங்கள் உலகமே நீ தான் என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?

எங்கள் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உன் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச் செய்யுதம்மா!

நேற்று போல் இருக்கிறது உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை நினைக்கையிலே
ஏன் 
எங்களை மறந்தாய் அம்மா!

எங்கும் நிழலாய் பின்தொடர்ந்தாய்- இப்போது
பாதிவழி விட்டுவிட்டு பரலோகம் சென்றதுமேன்?
அன்பிற்கே சாவு என்றால் அகிலம் என்னாவது?
என்னுயிரே வந்துவிடு ஏங்கி நான் தவிக்கின்றேன்

எங்கள் ஆருயிர் அம்மாவே!
எங்களிடம் திரும்பவும் நீ வந்துவிடு!
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார்
வருவதில்லை மானிடர் இயல்பு இதுதான் என்று
மறக்கவும் முடியவில்லை அம்மா!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்