Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பரமேஸ்வரன் ஞானபதி
இளைப்பாறிய தாதி - யாழ் போதனா வைத்தியசாலை
இறப்பு - 22 JAN 2011
அமரர் பரமேஸ்வரன் ஞானபதி 2011 மானிப்பாய் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.


யாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரன் ஞானபதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்களில் நிறைந்தவளே
பரமனோடு கலந்தவளே- அம்மா
காயங்கள் ஆறிப்போகும்
கற்பனைகள் மாறிப்போகும்
கனவுகள் கலைந்து போகும்- ஆனால்
என்றுமே மாறாமல் இருப்பது
உங்கள் பாசம் மட்டுமே
மழலைகளின் மனத்தை ஈர்த்து
ஈகையொடு பிறர்பால் அன்பு காட்டி
இம்மைக்கும் மறுமைக்கும்- நல்
ஆசானாய் பாதை காட்டி
அல்லும் பகலும் எமைக்காத்து
அரவணைத்த தாயே
கண் இமைக்கும் நேரத்தில்
பத்தாண்டுகள் ஓடி மறைந்துவிட்டதோ- அம்மா!
நீங்கள் விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே எம்மை விட்டு
கலைந்து போகாது
கண்களில் கண்ணீர் சிந்திட
கதறி அழுகின்றோம்
உங்கள் நினைவுகளால்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்