Clicky

பிறப்பு 14 JUN 1939
இறப்பு 14 AUG 2020
அமரர் பரமேஸ்வரி துரைசிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 81
அமரர் பரமேஸ்வரி துரைசிங்கம் 1939 - 2020 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

முகுந்தன் அருந்தவராணி (மணி) 15 AUG 2020 France

ஆழ்ந்த இரங்கல் ! திருமதி பரமேஸ்வரி துரைசிங்கம் அவர்கள் காலமாகிய தகவலறிந்து அதிர்ந்து போகிறோம். இவரது பிரிவின் துயரில் வாடும் அனைவருடன் தொலைவில் வாழும் நாம் மானசீகமாக இணைகிறோம். எமது இரங்கலை வார்த்தைகளில் பகிர்கிறோம் ! உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (குறள் 339 – நிலையாமை) 'எனக்கொண்ணு ஆனதுன்னா ஒனக்குவேற பிள்ளையுண்டு ஒனக்கேதும் ஆனதுன்னா எனக்குவேற தாயிருக்கா? ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரும ஒத்தவரி சொல்லலியே!' (தாயார் குறித்த கவி வைரமுத்துவின் வரிகள்) "பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை!" ( கவி வைரமுத்து) உடம்பார் அழியின் உயிரார் அழிவர் (திருமந்திரம்) ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா! நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும் எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும் (நல்வழி - ஔவையார்) இயற்கையின் நியதியை ஏற்றவர்களாக மௌனிக்கிறோம் ! - முகுந்தன் அருந்தா குடும்பம் (பிரான்சு)