13ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பரமேஸ்வரி செல்வநாயகம்
இளைப்பாறிய ஆசிரியை - யா/சுதுமலை சின்மய வித்தியாலயம், மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி
வயது 68
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி முருகன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி செல்வநாயகம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உம்மைப் பறிந்து பதின்மூன்று
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அம்மா!
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்