Clicky

பிறப்பு 22 JUN 1949
இறப்பு 27 JAN 2021
அமரர் சிற்றம்பலம் பரமசிவம் 1949 - 2021 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
22 JUN, 1949
Death
27 JAN, 2021
Late Paramasivam Sittampalam
பெரிய மாமா -------------------- எங்கள் மாமாவே சொக்கத்தங்கமான மாமாவே. எங்கள் அன்பு மாமா ஆசை மாமா பாசமான பெரிய மாமாவே. எங்களை வளர்த்த அன்பு மாமாவே. எங்கே சென்றீர்கள் எங்களிடம் கூறாமல். எங்கள் மாமா திருமுகத்தை பார்க்க முடியாத பாவிகளாக நிற்கதியில் நாம். எங்கள் மாமாவோடு ஒன்று கூடி சேர்ந்து ஒற்றுமையாய் வாழ்ந்த காலம், அது பொற்காலம். எங்கள் மாமாவின் மார்பிலும் தோளிலும் துள்ளி விளையாடிய அந்த பொற்காலம். எங்கள் மாவிற்கு பிடித்தமான, எல்லோரும் ஒன்றாய் கூடி, கூழ் குடிக்கும் அற்புதகாலம். எங்கள் மாமாவிற்கு பின் யார் வருவார் எமக்கு, அந்த அற்புத காலத்தை மீட்டித்தர. எங்கள் மாமா கடவுளிடம் சென்றுவிட்டாராம், தொலை பேசியில் ஒரு அழைப்பு. எங்கள் மாமாவா கடவுளிடம் சென்று விட்டாரா, நம்பவே முடியவில்லை. எங்கள் மாமா எப்போதும் எங்களுடன் இருந்த மாமா,இப்போது எங்களுடன் இல்லையாம். ஆம் நம்பியே ஆகவேண்டும், ஏனெனில் இதுவே யதார்த்தம். எங்கள் மாமாவின் ஆத்மா சாந்தி அடைய, கடவுளிடம் பிரார்த்திக்கும் மாமாவின் பிரிவில் துயருறும் அத்தை, மைத்துனர்கள், மைத்துனி ஆகியோருடன் உங்கள் மருமக்கள். இரவீந்திரன் & சசிகலா குடும்பம். Basel Switzerland ஓம் சாந்தி சாந்தி சாந்தி ... ... ...
Write Tribute

Tributes