கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் வேம்படி, குஞ்சுப்பரந்தன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவம் சண்முகலிங்கம் அவர்கள் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசிவம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சடாச்சரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதிவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
சஜித்தா, காலஞ்சென்ற அபிராமி ஆகியோரின் அருமைத் தகப்பனாரும்,
கணேசலிங்கம், புஸ்பலிங்கம், மனோகரி, தர்மலிங்கம், சிவகௌரி, புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிரிஜாதேவி, சிவரஞ்சினி, நாகேந்திரம், சித்ரா, இராஜேந்திரம், விக்கினேஸ்வரன், மதிவதன், மதிரூபன், ரஞ்சிதமதி, சாந்திமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவரஞ்சனி, தாரணி, சிவபாதம், சாரதி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.