

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 2ம் யூனிட்டை நிரந்தர வசிப்பிடமாக கொண்ட பரமசிவம் செல்வரத்தினம் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை இன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பொன்னமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவரான சிவசம்பு பரமசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயனன்(அமுதன்- பிரான்ஸ் ), உதயசீலன் (உதயன்- மாவீரர் ) வென்னிலா (நிலா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமுதினி(பிரான்ஸ்), பிரகாஷ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரட்சனா, ராதயன்(பிரான்ஸ்), கயல்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜான்வி அவர்களின் அன்புப் பூட்டியும்,
நவரத்தினம் தங்கரத்தினம் மற்றும் காலஞ்சென்றவர்களான வைரகப்பிள்ளை, மகாலிங்கம், சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் முரசுமோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து கீரிமலை வீதி மாவிட்டபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33652586862
- Mobile : +94769113580
- Mobile : +33695929682
- Mobile : +19059241858