

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும், வவுனியா கற்குழியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமநாதர் பூபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
''எங்கள் அன்பு அப்பாவே
ஆண்டுகள் ஒன்று சென்றாலும்
ஆறிடுமா? எம் துயரம்
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
இன்றுடன் உங்கள் குரல் கேட்டு
ஆண்டொன்று ஆகிவிட்டாலும்
நீங்கள் எம்முடன் இல்லை என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கின்றதே அப்பா
வளமான வாழ்வு தந்து
வாழ்விற்கு ஒளி தந்து
தேசம் புகழ
பாசத்துடன் எமை வளர்த்து
இன்பமுடன் நாம் வாழ
நீங்கள் எட்டாத்தூரம்
எமை விட்டுச்சென்றதேனோ அப்பா
ஆண்டுகள் ஒன்றல்ல ஓராயிரம்
ஆண்டுகள் சென்றாலும் உங்கள்
நினைவுகள் எம்மை விட்டு நீங்காது அப்பா
உங்கள் ஆத்மா இறைவன் பாதம் சென்று நிலையான
அமைதியும், சாந்தியும் பெறட்டும் அப்பா!
ஓம் சாந்தி...... ஓம் சாந்தி..... ஓம் சாந்தி'
உங்கள் பிரிவுத்துயருடன் உங்கள் ஆத்ம சாந்திக்காக
வேண்டி நிற்கும் குடும்பத்தினர்
Rest in Peace.