

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் தெய்வேந்திரம் அவர்கள் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமநாதன், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்தவராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கோகுலேஸ்வரன், திலகேஸ்வரன், பத்மபிரியா, ஷர்மிலா, கோமலதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசேந்திரம், காலஞ்சென்ற விஜயேந்திரம்(அன்ரன்), சரோஜாதேவி, Dr. வேணுகாந்தன், கலாரஞ்சினி, காலஞ்சென்ற பத்மகாந்தன், பத்மினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயசாந்தி, உதயா, சுகராஜ், யதுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேந்திரராசா, குலேந்திரராசா, காலஞ்சென்ற தெய்வேந்திரராசா, கணேந்திரராசா, காலஞ்சென்ற வசந்தராணி, பத்மராணி, காலஞ்சென்றவர்களான சுந்தரராசா, சுரேந்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வர்மிகா, தன்சிகா, ஹனா, ஜக்சிதா, சஜித், யுட்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.