10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ் கலட்டி அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் லவநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழிநீரை துடைக்க விரல் ஒன்று இருந்தது அன்று
பத்து ஆண்டுகள் கழிந்தது இன்று
இதயம் கருகி இமைகள் நனைகிறது
உங்கள் பிரிவினிலே...
எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே!
என கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டுவழி
தெரியாத் தூரம் விரைந்தோடி சென்றதேனோ!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
நீங்கள் எமக்கு வழிகாட்டியாய்
எங்கள்
இதயத்திலேயே வாழ்கிறீர்கள் அப்பா!
தகவல்:
மனைவி, பிள்ளைகள்