
கிளிநொச்சி கோரக்கன்கட்டு முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ். வரணி இயற்றாலையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமஞானம் கந்தையா அவர்கள் 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை!!!
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
உங்களைக் காண்பது எப்போது
என்று தெரியவில்லை
உங்கள் நினைவுகளால்
ஆறாத்துயரில் மூழ்கி இரங்குகிறோம்
உங்கள் வரவை எதிர்பார்த்து!!!
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 1.00 மணியளவில் நடைபெறும்.