Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAR 1927
இறப்பு 04 MAR 2020
அமரர் பரமேஸ்வரி சோமசுந்தரம் 1927 - 2020 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 50 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும்,  சாவகச்சேரி நுணாவில் மேற்கு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று Mississauga வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா பொன்னம்மா(மட்டுவில் தெற்கு) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னம்மா(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(நுணாவில் மேற்கு) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி(நுணாவில் மேற்கு), லிங்கேஸ்வரன்(கனடா) மற்றும் கமலேஸ்வரி(அவுஸ்திரேலியா), குகேந்திரன்(Holland), விக்கினேஸ்வரன்(ஜேர்மனி), குணேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அரசநாயகம்(ஜேர்மனி), தேவகி(கனடா), சிவநாதன்(அவுஸ்திரேலியா), செந்தில்சோதி(Holland), சிவசக்தி(ஜேர்மனி), தர்மரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, சண்முகநாதன், நாகேஸ்வரி, வெற்றிவேல், அரியரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, செல்லம்மா, அரியரட்ணம் மற்றும் தயாவதி(உசன்), புனிதநாயகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவமீரா- தனோஜன்(லண்டன்), சிவமித்திரா-  Robert(அவுஸ்திரேலியா), சிவோதயன்- சரண்யா(அவுஸ்திரேலியா), தர்சிக்கா- காசிராஜன்(கனடா), றஜிக்கா(கனடா), கிரிசாந்தன்- காவ்யா(கனடா), ஜனகன்(Holland), மிதுனன்(Holland), சாத்வீகன்- ஷிரவந்தி(கனடா), தனுஷ்(கனடா), சாம்பவி(Germany), ஆகாஷ்(Germany), அபிலாஷ்(Germany), ஆராதனா(Germany) ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

Yaston, Alivia, Mia, Sanjay, Dylan, Aarushi, Raghav ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்