யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், Doncaster ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பன்னீர்ச்செல்வம் செல்வரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:18/06/2023.
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும் துடிக்கின்றது
எங்கள் இதயம் உந்தன் இனிய புன்னகையை
மீண்டும் ஒருமுறை காண்போமா...
வாழ்க்கை என்ற வசந்த காலம்
வரும்போதே- உங்களை வாரி
அணைத்துக் கொண்டானே
அந்த இறைவன் வலி தாங்க முடியாமல்
நாங்கள் வாழ்நாள் முழுவதும்
துடித்து நிற்கின்றோம்!
ஒரு நாளும் மாறாது- எம் சொந்தம்
எங்கள் உயிரோடு உயிர் சேர்ந்தது உந்தன் பந்தம்
ஆண்டு ஒன்று சென்றாலும் - எம் மனங்களில்
நிறைந்திருக்கிறாய்!
இறப்பது வாழ்வில் இயற்கையின் நியதி
இளவயதில் நீங்கள் பிரிந்ததுதான் - எங்கள்
இதயத்தை வாட்டுது
காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
இன்றும் நீங்கள் எம்மோடு
வாழ்ந்து கொண்டே இருக்கின்றீர்கள் என்றும்
நீங்காத சோகம் எம் நெஞ்சங்களோடு
ஈரவிழிகளுடன் உந்தன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...