3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பண்டாரி சோமசுந்தரம்
இளைப்பாறிய பொறியியலாளர்
வயது 84
Tribute
50
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பண்டாரி சோமசுந்தரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ ..
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து மூன்று ஆண்டு
ஆனாலும்
ஆறாது
உங்கள் பிரிவுத்துயர் ஐயா ...
எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த
நாட்கள்
எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே ஐயா ...
தந்தை என்ற சொல்லுக்கே
இலக்கணமாய்
தரணி போற்றும்படி
எம்மை வளர்த்தீர்கள்
பலபேரும்
போற்றிட எமக்கு
பல்கலையும்
புகட்டி பார் புகழ் வைத்து
வையத்துள்
நாம் முந்தியிருக்க
அயராது
தனையுருக்கிய தெய்வத்திற்கு
பாரில் நிகர்தான் யார்!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்