

யாழ். சாவகச்சேரி மட்டுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சரத்தினம் தில்லைநடேசன் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தில்லைநடேசன்(இளைப்பாறிய நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துஜன்(பிரான்ஸ்), மிதிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, தர்மகுலசேகரம் மற்றும் சத்தியராணி, சத்தியசீலன்(லண்டன்), பத்மாவதி, சூரியகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஷிதா, கெளதமன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவராசா, ராஜலட்சுமி, காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் சாந்தி, மகேந்திரன், தவலீலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஜிதன்- மதி, சைலஜா- இன்பகரன், விஜிமோகன்- நிதர்சி, கோவர்த்தன், நிசானி ஆகியோரின் சிறிய தாயாரும்,
சுபிதா, மயூரா, மதுஷா, மனோஜா ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆத்மிகா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.