யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சரட்ணதேவி சிறீஸ்கந்தராஜா அவர்கள் 19-10-2022 புதன்கிழமை அன்று சிவனடி எய்தினார்.
அன்னார், கனடாவை சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்தையா சரோஜினிதேவி(நயினை நாகபூசனி அம்மன் ஆலய அறங்காவலர் சபை முன்னாள் உறுப்பினர்) தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.
எம் நினைவோடு நினைவாகி
கனவோடு கனவாகி
உணர்வோடு உணர்வாகி
உயிரோடு உயிராக
கலந்த
எம் அம்மாவே!
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !
அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா
மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ
வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் Dr.சிறீஸ்காந்தராஜா(கணவர்), சிறீதாட்ஷாயினி(மகள்), தினேஸ்குமார்(மகன்), பிரகதீஸ்குமார்(மகன்) மற்றும் சகோதர, சகோதரிகள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details