
மன்னார் ஆத்திமோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் நாகமுத்து அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், லண்டனைச் சேர்ந்த நாகமுத்து புஸ்பராணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ஜெகநாதன்(லண்டன்), இராமலிங்கம்(லண்டன்), சிவராணி(லண்டன்), யோகராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிருந்தினி(லண்டன்), கிருத்திகா(லண்டன்), ரதீஷன்(லண்டன்), சுதர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷ், அனீகா, நிருஷன், அக்ஷயா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
ரணுஷ், ஆருஷன், சுபிட்ஷா, சஜினிகா, ஜஷ்வின், சன்ஷிகா ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பெற்றெடுத்தவர் கண்ணீர்மல்க
உடன்பிறந்தவர் ஓலமிட
சித்தப்பா மாமா என்ற மழலைகளுடன்
கூடி குலாவிடவும்
உறவுகளிடமும் நண்பர்களிடமும்
பாசத்துக்கும் அன்புக்கும் அடிமைப்பட்ட
எம் பஞ்சலிங்கமே என்று உன் முகம்
இனி நாம் காண்போம்
எம்மை எல்லாம் ஏமாற்றிய ஈசனே
இனி எம் பஞ்சனே உன் பாதத்தில்
சமர்ப்பிக்கின்றோம் ...
My deepest heart felt condolence. Rest In Peace.