யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 11, வட்டுக்கோட்டை சங்கரத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சலிங்கம் குகனேசலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே
அன்பானவனே உன் பெயரும் விளங்கும்
கல் மனம் படைத்த காலனவன் கவர்ந்தானே
உன் உயிரை
புன்னகை பூத்த பூமுகமே
பிறர் நலனைக் கருத்தாய் கொண்டவனே
கலங்காத மனதை உடையவனே
வேண்டுவோர் வேண்டியதை நிறைவேற்றும்
செயல் கொண்ட வீரனே
நோயற்று அலறியதில்லை நொந்து மனம்
வாடியதில்லை வாழ்ந்த காலம் போதுமென்று
நாடி வந்த எமையெல்லாம் பாதியிலே
தவிக்க விட்டு சென்றீரோ?
ஏங்குதையா எம் விழிகள் தேடுதையா
அந்த முத்தமிட்ட
பூ முகத்தை ஏங்கித் தவிக்கின்றோம்
இன்னும் உங்கள் பூமுகத்தை
பார்ப்பதற்கு ஏங்குகின்றோம்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...