திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மலோஜனிதேவி தர்மலிங்கம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், 31ம் நாள் நினைவஞ்சலியும்.
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
உமது எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது
நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவரைப் பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்துக்கலாச்சார மண்டபத்தில் மதியபோசன நிகழ்வும் இடம்பெறும். இந்நிகழ்வில் தாங்களும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details