7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பழனிப்பிள்ளை ஸ்ரீ அனந்தராஜா
இறப்பு
- 27 AUG 2017
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 08-09-2024
கண்டி கேகாலையைப் பிறப்பிடமாகவும், யாழ். கலட்டி அல்வாய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பழனிப்பிள்ளை ஸ்ரீ ஆனந்தராஜா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு ஆனாலும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த ஐயா!
ஆண்டு ஏழு கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் ஐயா!
கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
ஐயா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே !
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
மனைவி - கமலாம்பிகை, பிள்ளைகள்- சத்தியலிங்கம், யோகலிங்கம், வானதி இராசம்மா